போட்டியின் போது 2 தொப்பிகளை அணிந்திருந்த மோர்கன். அதன் பின்னால் இருக்கும் காரணம் இதுதான் – விவரம் இதோ

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன்க்கு நூறாவது டி20 போட்டியாக அமைந்தது. மேலும் இங்கிலாந்து அணி சார்பாக முதல் நபராக 100 டி20 போட்டிகளில் பங்கேற்ற பெருமையையும் அவர் பெற்றார்.

- Advertisement -

அதே போட்டியில் அவர் கேப்டனாக இருந்து அணியை வெற்றி பெறச் செய்ததால் அவருக்கு அந்த போட்டி இருமடங்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் சமூக வலைதளத்திலும் மோர்கனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தன. அதேவேளையில் இந்த போட்டியில் மைதானத்தில் மோர்கன் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது இரண்டு தொப்பிகளுடன் அடிக்கடி அவரை பார்க்க முடிந்தது. மேலும் அதற்கான காரணம் என்ன என்றும் தகவலை சிலர் எதிர்பார்த்த நிலையில் அதற்கான காரணத்தை தற்போது நாங்கள் இந்த பதிவில் வழங்குகிறோம்.

அதாவது கடந்த மூன்றாவது போட்டியின்போது மோர்கன் தலையில் இரட்டை தொப்பிகளை அணிவதற்கு காரணம் யாதெனில் : அது அவர் ஒரு புதுவிதமான ஸ்டைல்க்காகவோ மற்றபடி வேறு எந்த ஒரு பயன்பாட்டிற்காகவோ அப்பை இரட்டை தொப்பிகளை அணியவில்லை. கடந்த ஆண்டு இதே நேரத்தில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இது பல துறைகளை தொடர்ந்து விளையாட்டு துறையிலும் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தியது.

morgan 1

குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இந்த கொரோனோ வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி சில விதிகளையும், நிபந்தனைகளையும் விதித்தது. அதன்படி பந்துவீச்சாளர்கள் யாரும் பந்தில் எச்சில் தடவக் கூடாது என்ற விதியை அறிவித்திருந்தது, அது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோன்று கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் பயோ பபுள் வளையத்தில் இருந்து விளையாடவேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வீரர்கள் களத்தில் விளையாடும் பொழுது அவர்களுடைய அவர்களின் தொப்பி, சன் கிளாஸ், டவல், கிட் என எந்தவிதமான கிரிக்கெட் உபகரணங்களையும் அம்பயர்களிடம் கொடுக்கக் கூடாது என்று ஒரு கட்டளை விதிக்கப்பட்டது. பொதுவாகவே பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஆரம்பிக்கும் முன்னர் அம்பயர்களிடம் தங்களது உடைமைகளை கொடுத்து விட்டு பந்துவீச செல்வது வழக்கம்.

morgan 2

ஆனால் தற்போது கோவிட் காரணமாக அம்பயரிடம் எந்த பொருட்களையும் வழங்கக் கூடாது என்பதற்காகவே பந்துவீச்சாளர்கள் சக வீரர்களிடம் தங்களது பொருட்களை கொடுக்க வேண்டும் அதன் காரணமாகத்தான் பந்துவீசும் வீரர்களுடைய தொப்பியை வாங்கி மோர்கன் தனது தலையில் வைத்துக் கொண்டார் இதன் காரணமாகவே அவர் இரட்டை தொப்பியுடன் போட்டியில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement