ஆசிய கோப்பை 2022 : சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கிடைக்காம போக தமிழக வீரரே காரணம் – உண்மையை விவரிக்கும் முன்னாள் வீரர்

samson
- Advertisement -

வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் 15ஆவது ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடரிலிருந்து தான் இறுதிக்கட்ட டி20 உலக கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதால் விமர்சனத்தை சந்தித்துள்ள விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சமி, அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் சேர்க்கப்படாதது நிறைய கேள்விகளை எழுப்பியது.

Samson

- Advertisement -

குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் மீண்டும் இந்த முக்கிய தொடரில் கழற்றி விடப்பட்டது நிறைய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2015இல் அறிமுகமான அவர் தனது 2வது போட்டியை 5 வருடங்கள் கழித்து 2020இல் தான் விளையாடினார். அதன் பின்பும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என கடந்த 7 வருடங்களில் அவர் இதுவரை வெறும் 16 டி20 போட்டிகளிலும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

மறுக்கப்படும் வாய்ப்பு:
முதல் 10 போட்டிகளிலாவது அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் வரலாற்றுச் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பின்பும் அதற்கடுத்து நடந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விடப்பட்ட அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அசத்திய போதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Dinesh-Karthik

ஏற்கனவே தொடர்ச்சியான நிலையான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் அநீதி இழைக்கப்படும் சஞ்சு சாம்சன் அயர்லாந்து தொடரிலிருந்து 12, 54, 6*, 30*, 15 என கீப்பராக சிறப்பாக செயல்பட துவங்கியுள்ள போதிலும் புறக்கணிக்கப் படுகிறார் என்பதே ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. இந்நிலையில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஏற்கனவே ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பதாலேயே ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டிகே காரணம்:
குறிப்பாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக் லோயர் மிடில் ஆர்டரில் பினிஷிங் செய்யும் மேட்ச் வின்னராக இருப்பதால் அவரைப் புறக்கணித்து விட்டு சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய தேர்வுக்குழு தயங்குவதே முக்கிய காரணமென்று கூறியுள்ள அவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நம்மால் எத்தனை விக்கெட் கீப்பர்களை அணியில் எடுக்க முடியும்? நம்மிடம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பதே தேர்வுக்குழுவுக்கு பிரச்சனை ஏற்படுத்துகிறது. நீங்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் அல்லது ரோகித் சர்மா பற்றி பேசுகிறீர்கள்”

Kaif

“மேலும் 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் பண்ட் 6வது இடத்தில் பாண்டியா இருக்கும் நிலையில் தினேஷ் கார்த்திக்கும் இருக்கிறார். அப்படிப்பட்ட பேட்டிங் வரிசையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இதுவரை நமக்கு தெரியாது. அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் கடுமையான போட்டி நிலவுகிறது. மேலும் தினேஷ் கார்த்திக் பற்றி ஏன் அனைவரும் பேசுகிறார்கள்? அவர் லோயர் ஆர்டரில் களமிறங்கி நிறைய போட்டிகளை பினிஷிங் செய்து கொடுத்துள்ளார்”

“கடைசி வரை பேட்டிங் செய்யக்கூடிய அவர் கடைசி ஓவரில் வின்னிங் ஷாட் அடிப்பதற்காகவே அணியில் இருக்கிறார். எனவே அவரைப் போன்ற மேட்ச் வின்னர் அணியில் இருக்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகின்றனர். சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் வாய்ப்பு பெற்றிருக்கலாம். இப்போதெல்லாம் அணி தேர்வு செய்யப்படும் போது அனைத்து நேரங்களிலும் அவரின் பெயரும் இருப்பது நல்லதாகும். போட்டியில் அவரின் பெயரும் இருப்பதால் தேர்வுக் குழுவினருக்கு எளிதான வேலை அமைவதில்லை”

samson

“எனவே கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே இருங்கள் என்றே நான் சஞ்சு சாம்சனுக்கு கூறுவேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடினார். அதேபோல் நீங்கள் விளையாடினால் உங்களது பெயரும் தாமாக வரும்” எனக்கூறினார். அதாவது ஆரம்ப காலத்தில் உத்தேச வீரர்களின் பட்டியலில் இடம்பெறாத சஞ்சு சாம்சன் தற்போது ஒவ்வொரு அணி தேர்வு செய்யும் போதும் தேர்வுக்குழுவுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் உத்தேச பட்டியலில் இடம் பிடிப்பதாக தெரிவிக்கும் முகமது கைஃப் இதே போல் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்திக் கொண்டே இருந்தால் நிச்சயம் நிலையான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement