அடித்து நொறுக்கப்பட்ட 24.75 கோடி பவுலர் மிட்சேல் ஸ்டார்க்.. 9 வருட கம்பேக்கின் முதல் போட்டியிலேயே பரிதாப சாதனை

Mitchell Starc
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டிகள் ஹைதராபாத் அணியை கொல்கத்தா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் போராடி 208/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 54, ஆண்ட்ரே ரசல் 64* ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் பின் 209 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் 63 (29) ரன்கள் விளாசி போராடினார். இருப்பினும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி போராடி தோல்வியை சந்தித்தது. மறுபுறம் வெற்றி கண்ட கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பரிதாப சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் 9 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாடினார். கடைசியாக 2014ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் கடந்த 9 வருடங்களாக நாட்டுக்காக விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்தார். இருப்பினும் இம்முறை விளையாடும் அவரை கொல்கத்தா 24.75 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகைக்கு வாங்கியது.

ஆனால் இதற்கு முன் இதே போல பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இஷான் கிசான், சாம் கரண் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தில் சுமாராக விளையாடி தோல்விகளுக்கு காரணமாக அமைந்தனர். அதே போல இம்முறை ஸ்டார்க் தடுமாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2015, 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஏராளமான அனுபவத்தை கொண்ட ஸ்டார்க் அழுத்தங்களை தாண்டி தங்களுக்கு துருப்புச் சீட்டாக செயல்படுவார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே தடுமாறிய ஸ்டார்க்கை 19வது ஓவரில் அடித்து நொறுக்கிய க்ளாஸென் – சபாஷ் அஹ்மத் ஆகியோர் 25 ரன்கள் தெறிக்க விட்டனர். அந்த வகையில் 1 விக்கெட் கூட எடுக்காத ஸ்டார்க் 4 ஓவரில் 53 ரன்களை வாரி வழங்கினார். இப்படி தன்னுடைய ஐபிஎல் கேரியரில் ஒரு போட்டியில் ஸ்டார்க் 50+ ரன்களை வாரி வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: 7 சரவெடி சிக்ஸர்கள் 2 விக்கெட்ஸ்.. ஜாம்பவான்கள் ஜேக் காலிஸ், கெயில் சாதனைகளை உடைத்த ரசல்.. 2 புதிய சாதனை

இதற்கு முன் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு முறை கூட இப்படி 50 ரன்கள் கொடுத்ததில்லை. ஆனால் தற்போது 9 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அவர் தன்னுடைய ஐபிஎல் கேரியரில் மோசமான பவுலிங்கை பதிவு செய்து பரிதாபமான சாதனையை படைத்துள்ளது கம்பீருக்கும் கொல்கத்தா ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

Advertisement