தப்பு பண்ணிட்டு தோனி அம்பயரிடம் கூட மன்னிப்பு கேட்டு இருக்காரு – சி.எஸ்.கே வீரர் பகிர்ந்த ரகசியம்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது பொறுமையான அணுகுமுறை காரணமாக கூல் கேப்டன் என்று ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். ஆனால் அவருக்கும் கோபம் ஏற்பட்டு ஆத்திரத்தை காண்பிக்கும் சூழல்கள் கிரிக்கெட்டில் நடந்துள்ளது. இந்நிலையில் தோனி அம்பயரிடம் கோபப்பட்டு மீண்டும் அவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் குறித்து சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Dhoni 1

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ் வீசினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் முக்கியமான நேரத்தில் மூன்று பந்துகளுக்கு 8 ரன்கள் இலக்கினை நோக்கி சென்னை அணி விளையாடிக்கொண்டிருந்தது அப்போது பென் ஸ்டோக்ஸ் ஒரு ஃபுல் டாஸ் பந்து வீசினார்.

ஆனால் அந்தப் பந்தை நோ பால் என தெரிவிக்க வந்த நடுவர் இறுதியில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். இதனால் கோபமடைந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுவரை தோனி மைதானத்தில் இது போன்ற செயலை செய்ததே இல்லை என்பதினால் அவர் செய்த செயல் அப்போது இணையத்தில் வைரல் ஆனது.

Dhoni-2

மேலும் தோனி மற்றும் அம்பயருக்கு இடையேயான வாக்குவாதம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த சமயத்தில் நடைபெற்ற பிரச்சனை குறித்து தற்போது நேர்காணலில் பேசிய சான்ட்னர் கூறுகையில் :

- Advertisement -

தோனி அன்று நடந்து கொண்ட விதம் எனக்கு மட்டுமல்ல மற்ற அனைத்து வீரர்களுக்கும் என் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்று அவர் வெளிப்படுத்தியது கோபம் வல்ல சென்னை அணியுடன் எவ்வளவு ஐக்கியமாக இருக்கிறார் என்பதை மட்டுமே காட்டியது. அன்று நாங்கள் போட்டி முடிந்த பின்பு பெவிலியனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம்.

Dhoni

அப்போது தோனி நடுவரிடம் பேசிக்கொண்டே எல்லைக் கோட்டைத் தாண்டி வந்தார். மேலும் மைதானத்தில் தான் நடந்து கொண்ட தவறான செயலுக்கு அவரிடம் நேரடியாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டே வந்தார் என்றும் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement