கமான் பங்ளாதேஷ்.. வாயை விட்டு இந்தியாவிடம் மண்ணை கவ்வியதால் கையேந்திய மார்ஷ்.. பரிதாப பேட்டி

Mitchell Marsh
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் செமி ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது. செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா பட்டாசாக விளையாடி 92 (41) ரன்கள் குவித்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

பரிதாப மார்ஷ்:
அதனால் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை அதனுடைய கடைசி போட்டியில் வங்கதேசம் தோற்கடித்தால் செமி ஃபைனல் வரலாம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானை 60க்கும் குறைவான ரன்கள் வித்யாசத்தில் வங்கதேசம் வீழ்த்த வேண்டும் அல்லது 13 ஓவர்களுக்கு மேல் தோற்கடிக்க வேண்டும்.

அப்படியானால் தான் ஆஸ்திரேலியாவுக்கு செமி ஃபைனல் வாய்ப்பு கிடைக்கும். முன்னதாக இப்போட்டியில் வென்று ஆஸ்திரேலியா செமி ஃபைனல் செல்வதற்கு இந்தியாவை விட நல்ல அணி கிடைக்காது என்று கேப்டன் மிட்சேல் மார்ஷ் தெரிவித்திருந்தார். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த மிதப்பில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் இந்தியாவிடம் மண்ணை கவ்வியதால் தற்போது வங்கதேசத்திடம் கையேந்தி அவர் இப்போட்டியின் முடிவில் பரிதாபமாக பேசியது பின்வருமாறு. “ஏமாற்றமளிக்கிறது. கிரிக்கெட்டில் இது நடக்கும். 40 ஓவரில் நிறைய சிறிய இடைவெளிகள் இருந்தது. இந்தியா சிறந்த அணி. ரோஹித் கிளாஸ் பிளேயர்”

இதையும் படிங்க: இந்தியாவை விட எனக்கு அது முக்கியமில்ல.. ஆஸ்திரேலியா என்னை காத்துலயே கரைக்க பாத்தாங்க.. ரோஹித் பேட்டி

“ஹெட் – மேக்ஸ்வெல் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தனர். இது போன்ற சேசிங்கில் நீங்கள் ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் நாங்கள் வெற்றியை பெற்றிருப்போம். இருப்பினும் கடைசியில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். தற்போது கமான் பங்களாதேஷ்” என்று கூறினார். இருப்பினும் தற்சமயத்தில் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனல் வருவதற்கே பிரகாச வாய்ப்புள்ளதால் ஆஸ்திரேலியா வெளியேறுவது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.

Advertisement