இங்கிலாந்துக்கு அநியாயம் நடந்துருச்சு.. தட்டி கேட்க வேண்டிய ஐசிசி’யே இந்தியாவுக்கு செஞ்சுட்டாங்க.. மைக்கேல் வாகன் விமர்சனம்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி ஜூன் 27ஆம் தேதி இரவு நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் நடைபெறுகிறது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஃபைனலில் தென்னாபிரிக்காவுடன் மோதப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த 2 அணிகளுமே டி20 உலகக் கோப்பையில் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 2 அணிகளுமே தலா 2 வெற்றிகள் பெற்று சமமான முன்னிலையும் பலத்தையும் பெற்றுள்ளன. இருப்பினும் கடைசியாக நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவை அசால்டாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து கடைசியில் கோப்பையும் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

அநியாய செமி ஃபைனல்:
எனவே இம்முறை அந்த தோல்விக்கு பதிலடியாக இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ட்ரினிடாட் நகரில் இன்று அதிகாலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்ற தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

ஆனால் அப்போட்டி கயானா நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். அத்துடன் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது செமி ஃபைனல் ட்ரினிடாட் நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தட்டிக் கேட்க வேண்டிய ஐசிசி’யே மொத்த உலகக் கோப்பையையும் இந்தியாவுக்கு சாதகமாக நடத்தி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதாவது அதிகாலை 6 மணிக்கு இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் அப்போட்டி கயானாவில் தான் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் கயானா நகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அப்போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சூப்பர் 8 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும்.

இதையும் படிங்க: இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டவசமின்றி தவறவிட்ட நிதிஷ் குமார் – அவருக்கு பதிலா சி.எஸ்.கே வீரர் தேர்வு

அதனாலேயே இப்படி விமர்சிக்கும் மைக்கேல் வாகன் இது பற்றி ட்விட்டரில் பதிபிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த செமி ஃபைனல் கண்டிப்பாக கயானாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த தொடருமே இந்தியாவை நோக்கி நடத்தப்படுவதால் அது மற்றவர்களுக்கு அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement