சூப்பர் 8 சுற்றுக்கு அவரை கொண்டு வாங்க.. விராட் கோலிக்கு பதிலா அவர்தான் ஓப்பனிங் பண்ணனும் – இங்கிலாந்து வீரர் கருத்து

Vaughan
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த லீக் தொடரில் இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் வேளையில் இந்த மூன்று போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் தான் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றியுள்ளனர்.

முதல் 2 போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவும், அமெரிக்கா அணிக்கெதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கும் ஆட்டநாயகன் விருதை பெற்றனர். பேட்டிங்கை பொருத்தவரை ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்த வேளையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறி உள்ளனர்.

- Advertisement -

மேலும் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பை மாற்ற வேண்டும் எனவும் விராட் கோலியை வழக்கம்போல மூன்றாவது இடத்தில் களமிறக்கி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக விளையாட வைக்கலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக்கூடியவர். எனவே அவரை துவக்க வீரராக களமிறக்கி விட்டு வழக்கம் போல கோலியை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கலாம்.

- Advertisement -

மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடது கை ஆட்டக்காரர்களாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். துவக்க வீரராக ஜெய்ஸ்வாலை களமிறக்கி மூன்றாவது இடத்தில் கோலியை களம் இறக்கினால் அவரால் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு அளிக்க முடியும்.

இதையும் படிங்க : வெறும் 106 ரன்ஸ்.. நேபாளை வீழ்த்திய வங்கதேசம்.. புதிய உலக சாதனையுடன் இந்தியாவை எதிர்கொள்ள தகுதி

எனவே அவரை துவக்க வீரராக களமிறக்கினால் இந்திய அணிக்கு அது சாதகமாக அமையும். அவர் துவக்க வீரராக விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றும் மைக்கேல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement