- Advertisement -
ஐ.பி.எல்

ஒருசில ஆட்டத்தை வச்சி அவரு அவ்ளோதானு முடிவு பண்ணிடாதீங்க.. சீனியர் வீரருக்கு ஆதரவாக பேசிய – மைக்கல் ஹசி

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள எட்டு லீக் போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தினை வகிக்கிறது. சி.எஸ்.கே அணி கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே லக்னோ அணிக்கெதிரான சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது 210 ரன்கள் அடித்தும் சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இன்று வெற்றி பெற சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து பேசிய சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறுகையில் : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நமது அணியின் சாதனை நன்றாகவே இருக்கிறது. அதோடு ரசிகர்களின் ஆதரவும் சேப்பாக்கத்தில் அதிகம் இருக்கும் என்பதால் அது நமக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

- Advertisement -

கடந்த சில ஆட்டங்களில் பனித்துளி காரணமாக நாம் பாதகத்தை சந்தித்திருந்தோம். அந்த நேரத்தில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் சவாலாக இருந்தது. ஜடேஜா சில ஆண்டுகளாகவே பின் வரிசையில் விளையாடி வருகிறார். ஆனால் தற்போது இந்த ஆண்டு நான்காவது இடத்தில் தேவைக்கு ஏற்றார் போல் இறங்கி சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : இவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம்.. ராஜஸ்தான் வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

அதேபோன்று ரஹானே கடைசியாக சில போட்டிகளில் ரன்களை அடிக்கவில்லை என்று அவர்மீது ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் ரகானே ஒரு கிளாஸ் பிளேயர் ஒரு சில ஆட்டங்களை வைத்து அவரது திறனை முடிவு செய்யக்கூடாது. நிச்சயம் அவரால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என ரஹானேவிற்கு ஆதரவாக மைக்கல் ஹசி பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -