தோனி செய்ததிலேயே இதுதான் தரமான சம்பவம். நடந்து 10 வருஷம் ஆச்சி – நினைவுகூர்ந்த மைக்கல் ஹஸ்ஸி

Hussey
- Advertisement -

தோனி செய்த சம்பவத்தில் இதுதான் மிகச் சிறப்பான சம்பவம் எனவும் இது மறக்க முடியாதது எனவும் கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக்கேல் ஹசி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேஹ்யூ ஹைடன் தற்போது டுவிட்டரில் சென்னை வீரர்கள தங்களுக்கு பிடித்தமான தருணங்களை பகிரும்படி அனைவரையும் கேட்டுக் கொண்டு வருகிறார். அதன்படி முன்னாள் சென்னை வீரர்கள் மற்றும் இந்நாள் சி.எஸ்.கே வீரர்கள் என பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அதன்படி சமீபத்தில் சென்னை சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா தனது முதல் கிரிக்கெட் தருணத்தை பகிர்ந்தார். அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் பாப் டு ப்லெசிஸ் என வரிசையாக சென்று இந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது மைக்கேல் ஹஸ்ஸி தனது சிறந்த தருணத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

கடந்த 2010ஆம் ஆண்டு தர்மசாலாவில் ஒரு ஐபிஎல் போட்டி நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த தொடரில் நாங்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தோம். இந்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம்.
மிகவும் நெருக்கமான போட்டியாக சென்று கொண்டிருந்தது.

hussey

அப்போது களத்தில் தோனி மட்டும் தனியாக நின்று கொண்டு இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இர்பான் பதான் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் இரண்டு பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது போட்டி கிட்டத்தட்ட அவர்களது கைகளுக்கு சென்று விட்டது என்றே எங்கள் அனைவருக்கும் தோன்றியது. இருப்பினும் களத்தில் நிற்பது தோனி என்பதனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.

அந்த நேரத்தில் தல தோனி ருத்ர தாண்டவம் ஆடி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அவர் அடித்த அந்த 2 சிக்ஸர்கள் மற்றும் அந்த ஆட்டம் எப்ப்போதும் மறக்கமுடியாத ஒன்று என்றும் ஹஸ்ஸி கூறியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் கோப்பையை வெனறோம். இதுதான் எனது மறக்க முடியாத நிகழ்வாகும் என்று கூறியுள்ளார் மைக்கேல் ஹஸி.

Advertisement