- Advertisement -
ஐ.பி.எல்

நானே பலமுறை ஆச்சரியப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட் கிட்ட அதைப்பத்தி கேட்டு இருக்கேன் – மைக்கல் ஹஸி பாராட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றதோடு மட்டுமின்றி புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்து முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம் சென்னை அணியின் பிளேஆப் வாய்ப்பும் தற்போது பிரகாசமாகியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதா அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்களை குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியால் 134 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக கேப்டன் ருதுராஜ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 98 ரன்கள் குவித்து நடராஜன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அவரது இந்த சிறப்பான பேட்டிக் காரணமாகவே சென்னை அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டின் ஷாட் டைமிங் ஆச்சரியம் அளிப்பதாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

ருதுராஜ் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது மட்டுமல்லாமல் டைமிங்கிலும் தரமான ஷாட்களை விளையாடக்கூடியவர். அவரிடம் நானே எப்படி கேப்பில் சரியாக அடிக்கிறாய் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். அதேபோன்று போட்டியின் எந்த நேரத்தில் அட்டாக் செய்து விளையாட வேண்டும்? எந்த பவுலரை அட்டாக் செய்து விளையாட வேண்டும்? என்பதை அவர் சரியாக புரிந்து செயல்படுகிறார்.

- Advertisement -

அதோடு அழுத்தமான நேரங்களில் எவ்வாறு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும்? சரியான நேரத்தில் எப்படி ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டும்? என்பதையும் புரிந்து கொண்டு அவர் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் ஒரு திட்டத்துடனே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது. ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பவர் பார்மை இழக்காமல் தொடர்ந்து அசத்தலாக விளையாடுவது சவாலான விஷயம். ஆனால் அதனை ருதுராஜ் சிறப்பாக செய்து வருகிறார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு – 4 சி.எஸ்.கே வீரர்களுக்கு இடம் (விவரம் இதோ)

அதோடு ஒரு மாபெரும் கேப்டனின் இடத்திற்கு வந்துள்ள அவர் மீது பெரிய அழுத்தம் இருக்கும் வேளையில் சரியான திட்டத்துடன் அவர் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் அவரின் மீது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி சிறந்த வீரராகவும் தான் யார் என்பதை இந்த இன்னிங்சின் மூலம் நிரூபித்துள்ளதாக மைக்கல் ஹஸி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -