- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்.சி.பி அணிக்காக மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல்லுக்கு இந்த பரிசை வழங்கியாக வேண்டும் – மனோஜ் திவாரி விமர்சனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றன. அதில் முதல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அதனை தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை வீழ்த்தி தற்போது இரண்டாவது குவாலிபர் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி இரண்டாம் பத்தியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

அதோடு முக்கியமான கடைசி லீக் போட்டியில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இது தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூரு அணியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணமாக கிளென் மேக்ஸ்வெல் பார்க்கப்படுகிறார். ஏனெனில் அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெற உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடர் முழுவதுமே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி ஆர்.சி.பி அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை கழட்டி விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மேக்ஸ்வெல் பற்றி நாம் இப்போது பேசியாக வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அற்புதமாக செயல்படும் அவர் ஆர்சிபி அணிக்காக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது அவரது வங்கி கணக்கில் பணம் சென்று விடுகிறது என்பதனால் எதைப்பற்றியும் ஆர்வம் இல்லாமல் சிரித்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு ஜாலியாக சென்று விடுகிறார்.

இதையும் படிங்க : டிகே தொடர்ந்து விளையாடனும்.. சிஎஸ்கே மாதிரி ஆர்சிபி டிஎன்ஏ’வில் அதை மாத்தனும்.. மைக்கேல் வாகன்

ஆனால் ஆர்.சி.பி அணி அதனை எளிதாக விடக்கூடாது. தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சரியாக விளையாடாத மேக்ஸ்வெல்லை அணியில் இருந்து நீக்கி பரிசளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு பெங்களூரு அணி செல்லும் என மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -