ஓய்வறையில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரை வெளியே அனுப்பிய மனோஜ் திவாரி – காரணம் இதுதான்

Tiwari
- Advertisement -

பெங்கால் மற்றும் ஆந்திர அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது பெங்கால் அணியின் ஓய்வு அறைக்குள் தேர்வு குழு உறுப்பினரான தேவாங் காந்தி உள்ளே சென்று இருக்கிறார். இந்த ஓய்வு அறையில் இருந்து மனோஜ் திவாரியின் மூலம் அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

tiwari 1

- Advertisement -

ஏனெனில் ஊழல் தடுப்பு முறை விதிகளின்படி அணி வீரர்களின் ஓய்வு அறைக்குள் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது. எனவே இந்த விதியை முன்வைத்து மனோஜ் திவாரி தேவாங் காந்திக்கு எதிராக செயல்பட்டு சிறிது வாக்குவதத்துடன் வெளியே அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு உறுப்பினர் தேவாங் காந்தி கூறுகையில் : பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லாலின் தலைமையில் தான் நான் விளையாடினேன் எனவே அவரின் அழைப்பின் பேரிலேயே அங்கிருந்த ஓய்வு அறைக்குள் சென்றேன். மேலும் எனக்கு முதுகு வலி இருந்தது எனவே பிசியோதெரபிஸ்ட் சந்திப்பதற்காகவும் நான் வீரர்களின் ஓய்வு அறைக்குள் அனுமதி பெற்றே சென்றேன் என்று தேவாங் காந்தி விளக்கமளித்தார்.

devang

ஆனால் மனோஜ் திவாரி அவரை வீரர்களின் அறைக்குள் நுழைந்து தவறு என்றும் நீங்கள் இங்கே இருக்க கூடாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இந்திய அணியில் அவர் இடம் பெற்றும் விளையாட முடியாமல் போனதால் தேர்வுக்குழு மேல் உள்ள ஆதங்கத்தின் காரணமாகவே அவர் இதுபோன்று நடந்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வகையில் இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement