117 கிலோ உடல் எடையால் தவித்த வீரர், இன்று சி.எஸ்.கே அணியில் ஸ்டாராக அசத்தல் – முழு விவரம்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என சாதனை படைத்த எம்எஸ் தோனி திடீரென கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே 4 தோல்விகளை பெற்று ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்தார். அத்துடன் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பிய அவர் அந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கி விட்டார்.

Ravindra Jaddeja MS Dhoni

- Advertisement -

தவிக்கும் சென்னை:
ஆனால் அதற்குள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பாதி பறிபோன நிலையில் கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளை குவித்த சென்னை  இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் எஞ்சிய 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வெறும் 3% மட்டுமே வாய்ப்புள்ளது.

எனவே 2020க்கு பின்பு மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத ஒரு நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம் அந்த அணியின் பவுலிங் சுமாராக இருப்பதே இந்த தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுழல் பந்து வீச்சில் பெரிதும் நம்பியிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் கைகொடுக்க தவறினார்கள். இருப்பினும் இந்த வருடம் அறிமுகமான இலங்கையின் இளம் சுழல்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா அந்த சரிவை ஓரளவு சரி செய்து வருகிறார்.

Makesh Theeksana

கலக்கும் தீக்சனா:
இதுவரை வாய்ப்பு கிடைத்த 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 7.41 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் கடைசிநேர ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 19-வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இப்படி அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் 2020க்கு முன்பு வரை 117 கிலோ உடல் எடையால் தடுமாறியதாகவும் அதன்பின் சென்னை கேப்டன் தோனியை சந்தித்து அவரின் ஆலோசனைகளுடன் கடுமையாக உடற்பயிற்சி செய்து பிட்டாக மாறியதாகவும் நெகிழ்ச்சியான பின்னணியை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சென்னை யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அண்டர்-19 காலகட்டங்களில் 117 கிலோ உடல் எடையால் தவித்த நான் யோயோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அதை குறைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 2020இல் மோசமான பிட்னெஸ் காரணமாக நிறைய இழப்புகளை சந்தித்தேன். அதிலிருந்து எடையை குறைக்க கடுமையாக முயற்சித்தேன். குறிப்பாக 2017/18 காலகட்டத்தில் அண்டர்-19 அணியில் இருந்தும் பிட்னெஸ் தோல்வியால் உலகக்கோப்பையில் இடம் பிடிக்க முடியவில்லை”

“அதே காரணத்தால் 2019இல் 3 நாட்கள் கொண்ட 10 போட்டிகளில் கூல்டிரிங்ஸ் தூக்குபவனாக செயல்பட்டேன். ஆனால் அதன்பின் 2020இல் அஜந்தா மெண்டிஸ் மற்றும் 2022இல் தோனியிடம் பேசி ஆலோசனைகளை பெற்று தன்னம்பிக்கையை விடாமல் கடுமையாக உழைத்ததால் இன்று 2022இல் இங்கு இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

உழைப்பால் வெற்றி:
ஆரம்ப காலங்களில் அதிக உடல் எடையால் கையில் கிடைத்த வாய்ப்புகளை கூட தவற விட்டதாக கூறும் தீக்ஷன அதன்பின் மெண்டிஸ், தோனி போன்றவர்களின் உதவியுடன் கடுமையாக உழைத்து கடந்த வருடம் சென்னை அணியில் முதல் முறையாக நெட் பந்துவீச்சாளராக இணைந்ததாக தெரிவிக்கிறார். அதில் தன்னைத்தானே மெருகேற்றி கொண்ட அவரின் திறமையைப் பார்த்த சென்னை அணி நிர்வாகம் சமீபத்திய ஏலத்தில் வெறும் 70 லட்சம் என்ற குறைந்த தொகைக்கு வாங்கியது.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தோனி இருப்பதால் எனக்கு சிஎஸ்கேவை மிகவும் பிடிக்கும். அதிலும் நேற்று அவருடன் டேபிள் டென்னிஸ் விளையாடியது நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலைமையில் விளையாட வேண்டும் என்ற ஆசைபட்ட எனக்கு அது நிறைவேறியுள்ளது. கால்பந்து, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் எனக்கு எந்த விளையாட்டாக இருந்தாலும் அவரிடம் அதில் நிறைய நுணுக்கங்கள் உள்ளது.

- Advertisement -

அனைத்தையும் செய்யும் திறமை பெற்றுள்ள அவருடன் விளையாடுவது கனவு நிஜமானதை போன்றதாகும். 2021இல் நாட்டுக்காகவும் விளையாடினேன். மேலும் 2021 டி20 உலகக்கோப்பை இலங்கை அணியில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்கு அவர்தான் காரணமா? – கோச் ரிக்கி பாண்டிங் கொடுத்த விளக்கம்

தற்போது 21 வயது மட்டுமே நிரம்பிய உள்ள அவர் இதுவரை இலங்கைக்காக 19 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் விரைவில் இலங்கைக்காக தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement