கொரோனா வைரஸ் தாக்கம். மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி

MUMBAI
- Advertisement -

பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் இந்த மாதம் 29 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் துவங்கியது . துவங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த டிக்கெட் விற்பனையை மகாராஷ்ட்ரா அரசு நிறுத்தி வைத்தது.

- Advertisement -

நாடுமுழுவதும் கோரோணா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 97 நாடுகளில் பரவியுள்ளது இந்தியாவில் 70 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் எனவும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

ஐபிஎல் நடக்கும் போது கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதனால் வைரஸ் தொற்று அதிகம் பாதிக்க கூடும் என்று தெரிகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனையை மகாராஷ்ட்ரா அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

MI

இதன் காரணமாக ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மஹாராஷ்டிரா அரசு. இந்த விற்பனை மீண்டும் சில நாட்களில் நிலைமையை கண்காணித்து விட்டு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

- Advertisement -

இம்முறையும் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் சென்னை அணிக்கு நிகரான ரசிகர் கூட்டத்தை கொண்ட மும்பை அணியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ticket

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐ.பி.எல் தொடர் ரத்தாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மும்பை அரசு எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement