- Advertisement -
இந்திய கிரிக்கெட்

387 ரன்ஸ்.. இங்கிலாந்துக்கு சமமான பதிலடி கொடுத்த இந்தியா.. லார்ட்ஸில் 141 வருட வரலாறு காணாத அரிதான நிகழ்வு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி லண்டன் லார்ட்ஸ் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 8 அடுத்து வந்த கருண் நாயர் 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ராகுல் அரை சதத்தை அடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் காயத்தையும் பொருட்படுத்தாமல் நங்கூரமாக விளையாடி அசத்தினார்.

- Advertisement -

இந்தியா பதிலடி:

4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றிய அந்த ஜோடியில் ரிஷப் பண்ட் தேவையின்றி 78 ரன்னில் ராகுல் சதமடிக்க உதவுவதற்காக ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் ராகுல் சதத்தை அடித்த கையோடு 100 ரன்னில் அவுட்டானார். அதனால் இந்தியா முன்னிலை பெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

அப்போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி நங்கூரமாக விளையாடி 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜடேஜா அரை சதத்தை அடித்து அசத்திய நிலையில் எதிர்புறம் வந்த வாசிங்டன் சுந்தர் நிதானத்தை காட்டினார். 7வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை முன்னிலை பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அரிதான நிகழ்வு:

அப்போது ஜடேஜா 72 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஆகாஷ் தீப் 7, பும்ரா 0 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். மறுபுறம் முடிந்தளவு போராடிய சுந்தர் 23 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக விட்டனர். அதனால் இந்தியாவும் முதல் இன்னிங்சில் சரியாக 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. இதன் வாயிலாக லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சமநிலையில் முடிந்த அரிதான நிகழ்வு நடந்தது.

இதையும் படிங்க:

1884 முதல் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 141 வருடங்களாக நடைபெற்ற எந்த போட்டியிலும் இப்படி ஸ்கோர் சமநிலை பெற்றதில்லை. அத்துடன் 2015 இங்கிலாந்து – நியூஸிலாந்து லீட்ஸ் போட்டிக்குப்பின் 10 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் ஸ்கோர் சமநிலை பெற்றது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்த விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 2/0 ரன்களை எடுத்துள்ளது. வேண்டுமென்றே நேரத்தை வீணடித்த இங்கிலாந்து வீரர்களுடன் நேருக்கு நேராக மோதிய இந்திய அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -