ஹார்டிக் பாண்டியாவை அடுத்து ஒரு நாள் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான் – லட்சுமணன் நம்பிக்கை

Krunal
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான ஹார்டிக் பாண்டியா தற்போது சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆல்-ரவுண்டராக விளையாடி வருகிறார். ஹர்டிக் பாண்டியா இந்திய அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார்.

Pandya 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் இந்திய அணியின் அடுத்த நிரந்தர ஆல்ரவுண்டர் குறித்து தனது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கபில்தேவ், இர்பான் பதான் அடுத்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹார்டிக் செயல்படுகிறார்.

அவரை தொடர்ந்து தற்போது க்ருனால் பாண்டியா தற்போது டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார். தற்போது அவர் இந்திய ஒருநாள் அணிக்காகவும் விளையாட தகுதி ஆகிவிட்டதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அசத்தினார்.

Krunal

அவரை இந்திய ஒருநாள் அணியின் 6 ஆவது வீரராக இறக்கலாம். மேலும் பவுலிங்கிலும் அவர் 10 ஓவர் வீசும் திறன் உடையவர் என்பதால் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு நிரந்தர ஆல்-ரவுண்டராக மாற வாய்ப்பு உள்ளது என்று லட்சுமணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement