இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் வீரரான இவரே அதிக ரன்கள் குவிப்பார் – லாரா கணிப்பு

Lara
- Advertisement -

இந்தியாவில் 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் மேட்ச்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஐ.பி.எல் தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை பலரும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் இளம் வீரர் யார் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவானான பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் :

ipl

- Advertisement -

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து, ஆட்ட நாயகன் விருதை வெல்லப்போவது பெங்களூர் அணியை சேர்ந்த தேவ்தத் படிக்கல்தான் என்று கூறியுள்ளார். மேலும் படிக்கல் பற்றி பேசிய அவர், தேவ்தத் படிக்கல் ஒரு சிறந்த வீரர் ஆவார். கடந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக சில அரை சதங்கள் அடித்து அந்த அணியின் கேப்டன் கோலிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.

படிக்கல் கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. கண்டிப்பாக இந்த தொடரில் ஒரு சதத்தை அவர் விளாசுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை என்றாலும், ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரின் மதிப்பை கணக்கிட இயலாது.

Padikkal 3

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன் திறமையை மீண்டும் நிரூபித்து உள்ளார். எனவே மீதமிருக்கும் இந்த ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சீசனில் பெங்களூர் அணியில் அறிமுகமான படிக்கல் அந்த சீசனில் எமர்ஜிங் பிளேயர் அவார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்தார் படிக்கல். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே ட்ராபியில் 7 போட்டிகளில் களமிறங்கி 737 ரன்கள் குவித்து வலுவான பார்மில் உள்ளார் தேவ்தத் படிக்கல்.

Advertisement