- Advertisement -
ஐ.பி.எல்

என்ன பண்ணாலும் இவங்கள சேக்க முடியாது. பஞ்சாப் அணி தூக்கி எறியப்போகும் 5 வீரர்கள் – விவரம் இதோ

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஆகஸ்ட் 20ம் தேதி துபாய் செல்ல இருக்கிறார்கள். ஒரு அணிக்கு அதிகபட்சமாக 24 வீரர்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில அணிகளில் 24க்கும் அதிகமான அணி வீரர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் போன்ற அணிகள் நிறைய வீரர்களை நீக்க வேண்டி உள்ளது.

அப்படி பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக 5 வீரர்கள் இருக்கிறார்கள் இந்த வீரர்களை பஞ்சாப் அணி துபாய் செல்லும் முன்னர் நீக்கிவிடும். அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

தர்சன் நல்கண்டே :

21 வயது வீரரான இவர் விதர்பா அணிக்காக சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடிய இவர் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக வீழ்த்தி அசத்தினார். அதன் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக தேர்வானார். இப்போது எண்ணிக்கை சிக்கலினால் வேறு வழியில்லாமல் இவர் கழட்டி விடப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அர்ஸ்தீப் சிங் :

இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். 21 வயதான வீரர் பஞ்சாப் மாநிலத்திற்கு உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். கடந்த ஆண்டு அறிமுகமான இவர் 3 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ளார். இருப்பினும் இவருக்கும் அணியில் இடம் இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

பிரப்சிம்ரன் சிங் :

20 வயதான இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். பஞ்சாப் மாநிலத்திற்கு உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார் .மேலும் கேஎல் ராகுல் ,நிக்கோலஸ் பூரன் என இரண்டு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் இவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டு விடும் என்பது உறுதி. இவர் கடந்த ஆண்டு 1 ஐ.பி.எல் போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெகதீஷா சுசித்

2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால் ஏற்கனவே பஞ்சாப் அணியில், கிருஷ்ணப்பா கௌதம் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இவருக்கு அணியில் இடம் கிடைப்பது வாய்ப்பு குறைவு.

ஹர்தஸ் வில்ஜியோன் :

வேகப்பந்து வீச்சாளரான இவர் சென்ற வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார் ரன்களை வாரி வழங்குவதன் காரணமாக இவர் கழட்டி விடப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -
Published by