நியூசி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு. நாங்கள் இப்போது இதை செய்தால் போதும் வெற்றி உறுதி – கோலி நம்பிக்கை

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

IndvsNz

இந்தப் போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. இந்த டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தற்போது இந்திய அணி பந்து வீச தயாராகி வருகிறது. டாஸ் முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது : கடந்த போட்டியில் 230 ரன்கள் டார்கெட் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

- Advertisement -

இந்த நான்கு நாட்களாக நியூசிலாந்து டூரில் தற்போது நிம்மதியாக உறங்கி உள்ளோம் அதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் பயணம் குறித்த எந்த ஒரு களைப்பும் தற்போது எங்களுக்கு இல்லை. சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடுகிறோம்.

Rahul-2

இன்றைய போட்டியில் பீல்டிங்கில் மட்டும் நாங்கள் இன்னும் சற்று சிறப்பாக செய்ய உத்தேசம் இட்டுள்ளோம். இந்த போட்டியில் 10 முதல் 15 எக்ஸ்ட்ரா ரன்களை தடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மைதானத்தின் வடிவம் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன. எனவே இன்றைய போட்டியில் நாங்கள் தடுக்கும் ஒவ்வொரு ரன்னும் தான் வெற்றியை தீர்மானிக்கும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement