நியூசிலாந்தையும் டார்கெட் பண்ணி இருக்கோம். எங்களோட பிளான் இதுதான் – கோலி அதிரடி பேட்டி

Kohli-1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Ind-vs-aus-1

- Advertisement -

இதற்காக இந்திய அணி பெங்களூரு போட்டி முடிந்ததும் பெங்களூரில் இருந்து நேற்று நியூசிலாந்து பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணி எதிரான போட்டி முடிந்ததும் பேட்டியளித்த கோலி கூறியதாவது :

கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. நாங்கள் டி-20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றினோம். அந்த அம்சங்களை சாதகமாக வைத்து இந்த முறையும் எங்களால் அங்கு சாதிக்க முடியும் என்று நம்புகிறோம். வெளிநாட்டு மண்ணில் உள்ளூர் அணிக்கு எதிராக நெருக்கடியை கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த முறை நியூசிலாந்து தொடரில் முதல் ஓவரில் இருந்தே அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க இருக்கிறோம். எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச்சிறந்த பார்மில் உள்ளனர் அவர்களால் எந்த மைதானத்திலும் சிறப்பாக பந்துவீச முடியும்.

kuldeep

அதனை சாதகமாக வைத்து அவர்களுக்கு துவக்க ஓவர்களில் இருந்தே நெருக்கடியை கொடுக்க இருக்கிறோம். மேலும் மிடில் ஓவர்களின் போது சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து நெருக்கடி அளித்து ரன்ரேட்டை குறித்து விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றும் இம்முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக அனைத்து தொடர்களையும் கைப்பற்ற விரும்புகிறோம் என்றும் கோலி பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement