- Advertisement -
ஐ.பி.எல்

Virat Kohli : அனைத்தும் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு போட்டிகளை இப்படியே விளையாடுவோம் – விராட் கோலி

ஐ.பி.எல் தொடரின் 46 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 52 ரன்களை அடித்தனர். மேலும், துவக்க வீரர் தவான் 50 ரன்களை அடித்தார்.

- Advertisement -

அதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஐயர் கூறியதாவது : முதலில் டாஸை இழந்தது முதல் தோல்வி பிறகு 160-165 ரன்களை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் 187 ரன்களை குவித்தனர். 3 ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடுவது எப்போதும் கடினம். அவர்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி அடைந்தனர்.

நாங்களும் சிறப்பாக பேட்டிங்கை துவங்கினோம். பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடி அடுத்து எனது விக்கெட்டை இழந்தேன். நானும் டிவில்லியர்ஸும் அவுட் ஆனதற்கு பிறகு ஆட்டம் முடிந்து விட்டது என்றே கருதினேன். இனிவரும் போட்டிகளில் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடி அனுபவித்து விளையாட விரும்புகிறோம். மீதமுள்ள 2 போட்டிகளையும் முடித்து தொடரை மகிழ்ச்சியாக அமர்ந்து பாக்க உள்ளோம் என்று கோலி கூறினார்.

- Advertisement -
Published by