இவரும் டெஸ்ட் அணிக்கு திரும்பினால் இந்தியாவை ஒண்ணுமே பண்ணமுடியாது – கோலி அதிரடி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிட்டு பேசினார். மேலும் தற்போது இந்திய அணியிடம் உள்ள வேகப்பந்துவீச்சு கூட்டணி சர்வதேச அணிகளை மிரட்டும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.

மேலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக பந்து வீசி வருகிறது என்றால் அவர் வந்தால் கண்டிப்பாக இந்தியாவில் நிச்சயம் மிகப் பெரிய பலமான பவுலிங் யூனிட்டை கொண்டிருக்கும் என்றும் ஸ்லிப்பில் நின்றிருக்கும் வீரர்கள் எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு பந்திலும் கேட்ச் வர அதிகமான வாய்ப்புள்ளது அந்த அளவிற்கு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர் என்றும் கோலி பேசினார்.

Bumrah-1

தற்போதுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு உண்மையில் சிறப்பாகவே உள்ளது. ஏனெனில் வெளிநாட்டு மைதானங்களில் கூட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கடந்த பல தொடர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement