நேற்றைய போட்டியில் கோலி அடிச்சது 89 ரன் என்றாலும். இதுல சதம் அடித்துள்ளார் – நம்பலையா விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ind vs Aus

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும் தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர். இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் கோலி அடித்த 89 ரன்கள் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடித்த 57வது அரை சதமாகும். இந்த போட்டியில் கோலி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனையில் சதம் அடித்துள்ளார். இதுவரை 236 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள கோலி 43 சதம் மற்றும் 57 அரை சதங்களுடன் 50க்கும் மேற்பட்ட ரன்களை நூறுமுறை அடித்துள்ளார்.

Kohli

இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 145 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்து சங்ககார 118 முறை, பாண்டிங் 112, காலிஸ் 103 முறை ஒருநாள் போட்டிகளில் 50 ரங்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்த பட்டியலில் இணைந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். மேலும் விரைவில் இவர்கள் நால்வரையும் தாண்டி முதலிடத்தில் செல்லவும் கோலிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement