நியூசிலாந்து அணியை பழி தீர்ப்பீர்களா ? என்ற கேள்விக்கு கோலியின் பதிலை பாருங்கள் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

ind vs nz 1

- Advertisement -

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் நியூசிலாந்து அணியை பழி தீர்ப்பீர்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளித்த கோலி கூறியதாவது : உண்மையில் நாம் பழி வாங்க நினைத்தாலும், அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே வராது.

நியூசிலாந்து வீரர்களுடன் இந்திய அணி வீரர்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. களத்தில் இருக்கும் போது போட்டி போட்டு விளையாடுவோம். அவ்வளவுதான் சர்வதேச அளவில் நியூஸிலாந்து அணி சிறந்த அணியாக திகழ்கிறது. மேலும் அவர்கள் மீது நல்ல மரியாதை வைத்துள்ளோம் அந்நாட்டு வீரர்கள் மிகவும் அன்பானவர்கள் நாங்களும் நிறைய மரியாதையும் அன்பும் வைத்துள்ளோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலக கோப்பை தொடரின் போது அரையிறுதிப் போட்டி வரை முதலிடத்தில் இருந்த இந்திய அணி நான்காம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே செய்தியாளர்கள் அந்த கேள்வியை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement