கங்குலி, தோனி என இருவரையும் தள்ளிவைத்து முதலிடம் பிடித்த கோலி. இதுலயும் சாதனையா ?- விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார்.

Ind-2

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

தற்போதுவரை இந்திய அணி 42 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 16 ரன்களை கடந்தபோது கேப்டனாக 5000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் 5000 ரன்களை விரைவாக அடித்த கேப்டன் என்ற சாதனையை தோனி 127 இன்னிங்ஸ்களில் அடித்து தன்வசம் வைத்திருந்தார்.

அவரை தற்போது கோலி பின்னுக்கு தள்ளி தனது 82 ஆவது இன்னிங்ஸில் கேப்டனாக 5000 ரன்களை அடித்து இந்த சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கேப்டனாக 5000 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற பெருமையையும் கோலி இன்று பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பாக தோனி, கங்குலி மற்றும் கோலி ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement