இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு இது மட்டுமே காரணம். வேறு எதும் இல்லை – கோலி பாராட்டு

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

IndvsNz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஒவ்ரகள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக குப்தில் 33 ரன்களையும், சைபர்ட் 33 ரன்களையும் குவித்தனர்.

அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் தொடக்க வீரர் ராகுல் 50 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்றார். ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் குவித்தார். ராகுல் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

rahul 3

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : மற்றொரு போட்டியையும் வெற்றிகரமாக இன்று முடித்துள்ளோம். குறிப்பாக பந்துவீச்சில் இன்று சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். பவுலர்கள் இன்றைய போட்டியில் முன்வந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அவர்கள் இன்று பந்து வீசிய விதம் அருமையாக இருந்தது. நியூசிலாந்து போன்ற ஒரு அணியை இதுபோன்ற மைதானத்தில் சுருட்டுவது எளிதல்ல. ஆனால் இதைத்தான் பவுலர்களிடம் இருந்து ஒரு கேப்டன் எதிர்பார்ப்பதாக இருக்கும்.

bumrah 2

இந்திய பந்துவீச்சாளர்கள் தந்த இந்த சிறப்பான செயல்பாடு அணிக்கு பலத்தை தருகின்றது. இந்த போட்டியில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். சாஹல் மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பும்ரா வீசிய விதம் அற்புதமாக இருந்தது. பீல்டிங்கில் இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். நியூசிலாந்து வலுவாக திரும்பி வரும் எங்களுக்கு தெரியும். அதனால் சவால் நிறைந்த அடுத்த போட்டிக்காக நாங்கள் சிறப்பாக தயாராக வேண்டி உள்ளது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement