- Advertisement -
இந்திய கிரிக்கெட்

Virat Kohli : ராகுலை 4 ஆவது வீரராக பயிற்சி போட்டியில் களமிறக்க இதுதான் காரணம் – கோலி பேட்டி

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் ஒரு ராகுலை நான்காவது வீரராக களம் இறக்கியது நல்ல விடயமாக நினைக்கிறேன். ஏனெனில் அவர் ரன்களை விரைவாக குவிக்கக்கூடிய ஆற்றல் பொருந்திய வீரர். ரன்களை எடுப்பது மிகவும் முக்கியமான வேலை அதனை ராகுல் மிக கச்சிதமாக செய்தார். அதனாலே ரன்களை விரைவாக குவிக்கவே நான் ராகுலை 4 ஆவது வீரராக களமிறக்கினேன்.

மேலும் டோனி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாடியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மேலும் உலக கோப்பை தொடரினை வெற்றிகரமாக துவங்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்று கோலி கூறினார்.

- Advertisement -
Published by