இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பதிவிடும் ஒரு பதிவிற்கு இத்தனை லட்சம் வருமானமா ? – தலைசுற்ற வைக்கும் விவரம்

Kohli
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் பல மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வைகயான போட்டிகளும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எப்போதும் பதிவுகளை பதிவிட்டு சுறுசுறுப்பாக இருந்து வந்தனர். இதில் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் விளம்பரம் பதிவுகளை பதிவிட்டு வருமானம் ஈட்ட தொடங்கினர்.

kohli

- Advertisement -

அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் இருப்பது போன்று பெரும்பாலும் இன்ஸ்டாகிராமிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மூன்று கோடி அறுபது லட்சத்துக்கும் அதிகமான போலோவெர்ஸ உள்ளனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் சராசரியாக 2.6 மில்லியன் பார்வைகளை பெறுவதாக கூறப்படுகிறது. இதனால் இவரும் விளம்பரம் பதிவுகளை பதிவிட்டு வருமானம் ஈட்டி வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 17வது இடத்தில் உள்ளார். இவரது மனைவி மற்றும் திரைப்பட நடிகையுமான அனுஷ்கா சர்மா 25 ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பகிரும் விளம்பர பதிவுக்கு 82 லட்சம் வருமானம் பெறுகிறார் என்பது தெறிய வந்துள்ளது.

Kohli

இந்த பட்டியலில் அமெரிக்க நடிகையும், மாடலுமான கேலி ஜனர் முதலாமிடத்தில் உள்ளார். இவரையடுத்து கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது இடத்திலும், கால்பந்து வீரர் நெய்மர் 4வது இடத்திலும், கால்பந்து வீரர் மெசி 5வது இடத்திலும், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெஹம் 6வது இடத்திலும் உள்ளார்கள். இந்த பட்டியலின் முதல் இருபது இடத்தில் விராட் கோலி மட்டும் தான் கிரிக்கெட் வீரர்.

Kohli

இந்தியளவில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி,பாலிவுட் நடிகைகள் காத்ரினா கைப் மற்றும் தீபிகா படுகோனே இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தான் ஒரு காஸ்ட்லியான வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோலி. மேலும் கோலியின் இந்த வருமான செய்தியை கண்ட ரசிகர்கள் தலைசுற்றி போயுள்ளனர்.

Advertisement