- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ள விராட் கோலி – எந்த இடம் தெரியுமா ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 தொடரானது தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டி20 தரவரிசை பட்டியலில் பல வீரர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். அதே வேளையில் இந்திய அணி வீரர்கள் சற்று சறுக்கலை சந்தித்துள்ளனர்.

அதன்படி எப்போதுமே ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி மிகப்பெரிய சறுக்கலை இந்த தரவரிசை பட்டியலில் சந்தித்துள்ளார். அதன்படி நடைபெற்ற நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி 68 ரன்களை மட்டுமே குவித்ததால் தற்போது 4 இடங்கள் பின்தங்கி எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே வேளையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 839 புள்ளிகளுடன் இந்த புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து டேவிட் மலான், மார்க்ராம், பின்ச் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இந்திய வீரரான கே.எல் ராகுல் இந்தப் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ராகுல் 194 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று மற்றொரு தொடக்க வீரரான ரோகித் இந்த உலக கோப்பை தொடரில் 174 ரன்கள் குவித்து தரவரிசை பட்டியல் அடிப்படையில் 15-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பவுலர்களை பொருத்தவரை இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா முதலிடத்திலும், தென்னாபிரிக்க வீரர் ஷம்சி இரண்டாவது இடத்திலும், அடில் ரஷித் மூன்றாவது இடத்திலும், ரஷீத் கான் நான்காவது இடத்திலும், ஆடம் சாம்பா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் கேப்டன் முகமது நபி முதல் இடத்திலும், வங்கதேச அணியின் முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by