ஒரு பந்து கூட விளையாட விடாமல் அதிரடி டிக்ளேர் கொடுத்த கோலி. காரணம் இதுதானாம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்திருந்தது.

Rahane

- Advertisement -

இதனால் தற்போது இந்தியா 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் ரஹானே ஜடேஜா மற்றும் புஜாரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் ஒரு பந்தினை கூட இந்திய அணி சந்திக்காமல் களமிறங்கும்போதே டிக்ளேர் அறிவித்து பந்துவீச மைதானத்திற்கு வந்தது.

தற்போது கோலி இரவோடு இரவாக இந்த டிக்ளேர் முடிவை அறிவித்தற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணி தற்போது 343 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் இன்னிங்ஸ் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று இந்திய அணி பேட்டிங் செய்யாமல் பங்களாதேஷ் அணியை களம் இறங்கினால் மூன்றாம் நாள் காலை நேரத்தில் பிட்ச்சின் வேகம் மற்றும் ஸ்விங் அதிகரிக்கும் மேலும் காலையில் தரப்படும் போது பந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உதவியாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட்டுகளையும் மேலும் இன்றைய நாளிலேயே போட்டியை முடித்து வெற்றி பெறுவதற்காகவே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்திய அணியில் தற்போது இருக்கும் அபாரமான பந்து வீச்சில் எவ்வளவு நேரம் பங்களாதேஷ் தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement