- Advertisement -
உலக கிரிக்கெட்

Virat Kohli : மற்றுமொரு சச்சினின் சாதனையை அசால்டாக தகர்த்த கோலி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி இன்று துவங்கியது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார்கள். ரோஹித் 18 ரன்களை அடித்து ஏமாற்றினார். ராகுல் ஓரளவு சிறப்பாக விளையாடி 48 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

பிறகு இந்தியாவின் கேப்டன் கோலி 82 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் கோலி 45 ரன்களை எட்டியபோது சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்தார். 20 ஆயிரம் ரன்களை கடக்க கோலிக்கு 417 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.

இதன் மூலம் உலகிலேயே 20,000 வரை விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையை அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் லாரா ஆகியோரிடம் இருந்து பறித்து முதலிடத்தில் உள்ளார். சச்சின் மற்றும் லாரா ஆகியோர் 20000ரன்களை எடுக்க 453 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by