- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓப்பனிங் செட் ஆகல.. நான் வேணா இப்படி பண்ணட்டுமா? ரோஹித் மற்றும் டிராவிட் கிட்ட பர்மிஷன் கேட்ட – விராட் கோலி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பைகளை தவறவிட்டு வந்த இந்திய அணிக்கு இந்த கோப்பை ஒரு ஆறுதல் அளித்துள்ளது. அதோடு பயிற்சியாளரான ராகுல் டிராவிடுக்கும் இது சரியான வழி அனுப்புதல் போட்டியாக அமைந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதலே சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பியது. ஏனெனில் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை விராட் கோலி விளையாடிய 7 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் போட்டியின் ஆரம்பத்திலேயே ஒரு சில பவுண்டரிகளை அடித்து ஆட்டமிழந்து வந்தார்.

- Advertisement -

இதனால் இந்த தொடரின் இடையே அவ்வப்போது விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. ஆனால் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் விராட் கோலியின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக துவக்க வீரராகவே களமிறங்க வைத்தனர்.

இதன் காரணமாக முதல் 7 போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட ரன்களை மட்டுமே அடித்த விராட் கோலி இறுதிப்போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி என 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் தனது பேட்டிங் குறித்து வெளிப்படையாக பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த தொடரில் என்னுடைய பார்ம் எப்படி இருந்தது என்பதை பார்த்தால் எனக்கே இது சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் என்னுடைய ஆட்டம் மோசமாகவே இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கி என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் அணிக்கு என்னால் பங்களிப்பை சரியாக வழங்க முடியாத போது நானே நேரடியாக சென்று ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரிடமும் துவக்க வீரராக எனக்கு செட்டாகவில்லை. மூன்றாவது வீரராக களம் இறங்கவா? என்று கேட்டேன்.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு 37 அது ஓகே.. ஆனா 35 வயசுலயே கோலி மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவிக்க காரணம் என்ன? – பின்னால் இருக்கும் விடயம்

ஆனால் அவர்கள் இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இறுதி வரை நீங்கள் துவக்க வீரராக மட்டுமே விளையாடுவீர்கள். உங்களது தரம் எங்களுக்கு தெரியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர். அதன் காரணமாகவே நான் மீண்டும் இறுதி போட்டியில் துவக்க வீரராக என்னுடைய பங்களிப்பை வழங்கினேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -