- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாம நெனைக்குற அளவுக்கு இது ஒன்னும் ஈஸி கிடையாது – வெற்றிக்கு பிறகு கே.எல் ராகுல் பேசியது என்ன?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற “சூப்பர் 4” சுற்றின் கடைசி போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் விராட் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் அடித்தார். அவருடன் களத்தில் இருந்த ரிஷப் பண்ட் 20 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த ஆறுதல் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று இருந்தாலும் இது ஒரு ஆறுதல் வெற்றியாகவே இந்திய அணிக்கு அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : ஒரு பெரிய காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் விளையாடுவது என்பது ஈஸியானது கிடையாது என்பது கடந்த சில போட்டிகளில் எனக்கு தெரியவந்தது.

நான் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போதும் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைத்தே களத்திற்கு வருகிறேன். ஆனால் என்னால் பழைய ரிதத்தில் விளையாட முடியவில்லை இதுதான் உண்மை. இந்த சில விஷயங்களை நான் ஒரு பிளேயராக கடைசி சில போட்டிகளில் கற்றுக் கொண்டேன். இந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறிது நேரம் களத்தில் நின்று விளையாட ஆசைப்பட்டேன்.

- Advertisement -

அதன்படி என்னால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட முடிந்தது. முதலில் இந்த போட்டியில் ஒரு சிக்சர் அடித்ததுமே கான்ஃபிடன்ஸ் வந்த பிறகு மீண்டும் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று ராகுல் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஹாங்காங் அணிக்கு எதிராக என்னால் சரியாக டைமிங் செய்ய முடியவில்லை. அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் என்னுடைய தன்னம்பிக்கை சற்று குறைந்தது.

இதையும் படிங்க : அவமானத்திலும் சப்போர்ட் பண்ண அவங்களுக்கு இந்த சதத்தை டெடிகேட் செய்கிறேன் – விராட் கோலி நெகிழ்ச்சி

ஆனால் இறுதியில் தற்போது மெதுமெதுவாக என்னுடைய பழைய ஆட்டத்திற்கு திரும்பி உள்ளதாக நினைக்கிறேன். இதுபோன்ற பெரிய தொடர்களில் இந்திய அணி இனிவரும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நாங்கள் கற்றுக் கொண்ட இந்த படங்களை வைத்து நிச்சயம் உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by