மீண்டும் நான் துவக்க வீரராக சிறப்பாக விளையாட காரணம் இதுதான் – கே.எல் ராகுல் ஓபன்டாக்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராகுல் தொடக்க வீரராக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எல் ராகுல் ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு பார்ம் அவுட் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கு பின்னர் மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கில் போன்ற பல வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு வந்ததால் மீண்டும் தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போன பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய ராகுல் இந்திய அணியின் வீரர்கள் தடுமாறியபோது சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். 84 ரன்கள் அடித்தது இக்கட்டான நிலையில் இந்திய அணியை விடாமல் தாங்கிப் பிடித்துள்ளார்.

இரு அணிகளுமே இந்த மைதானத்தில் ரன் குவிக்க தடுமாறிய நிலையில் 29 வயதான ராகுல் தனது அட்டகாசமான பேட்டிங்கின் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்டில் 149 ரன்கள் குவித்த ராகுல் மீண்டும் ஒருமுறை அதே போன்று ஒரு கிளாஸ் இன்னிங்சை இங்கு விளையாடி உள்ளார்.

rahul 1

இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் என்ன என்று தற்போது பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை. இந்த இடைவெளியில் நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். மேலும் பல்வேறு துவக்க வீரராக மட்டுமன்றி எந்த இடத்தில் இறங்கினாலும் விளையாடுவதற்காக என்னை தயார் செய்து கொண்டேன். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தி வருவதில் மகிழ்ச்சி.

rahul 1

இது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. எனவே நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதுமட்டுமின்றி ஏற்கனவே பென்ச்சில் அமர்ந்து போட்டிகளை பார்க்கையில் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு பவுன்சர்களை எதிர்கொள்கிறார்கள் ? எந்த பந்தை எப்படி அடிக்கிறார்கள் ? எந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு விளையாடுகிறார்கள் ? என்பதை கவனித்து வந்தேன் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement