- Advertisement -
ஐ.பி.எல்

மழைபெய்து ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டால் எந்த அணிக்கு சாம்பியன் பட்டம் தெரியுமா? – விவரம் இதோ

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்த வேளையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறின.

அதன்படி நடைபெற்ற இந்த பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் இன்று மே 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெறயிருந்த வலைப்பயிற்சி மழையால் கைவிடப்பட்ட வேளையில் இன்றும் இந்த போட்டியின் போது மழை பாதிப்பு இருக்கும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாட்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் கடைசி போட்டி முழுவதுமாக நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்று மாலை போட்டி துவங்கும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேளையில் மழை பெய்தால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இன்று முழுவதும் மழைபெய்து ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போனால் நாளை ரிசர்வ் டேவிற்கு போட்டி தள்ளி வைக்கப்படும். ஒருவேளை நாளை ரிசர்வ் டேவிலும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இறுதிப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடைசி இடம்.. இப்போ இதுவேறயா – குடும்ப பிரச்சனையில் சிக்கினாரா பாண்டியா?

அதோடு விதிமுறைப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் கொல்கத்தா அணி வென்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -