- Advertisement -
ஐ.பி.எல்

10.3 ஓவரில் ஹைதராபாத்தை முடித்த கொல்கத்தா வரலாற்று சாதனை.. தோனியின் இமாலய சாதனையை தவறவிட்ட கமின்ஸ்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்த ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். போதாக்குறைக்கு அதற்கடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி 9 (13) ரன்களில் அவுட்டானதால் 21/3 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் திணறியது. அப்போது சரிவை சரிசெய்ய முயற்சித்த ஐடன் மார்க்கம் 20 (23), நித்திஷ் ரெட்டி 13 (10), ஹென்றிச் க்ளாஸென் 16 (17) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

கொல்கத்தா 2024 சாம்பியன்:
அப்போது சபாஷ் அஹமத் 8, அப்துல் சமத் 4 ரன்களில் அவுட்டானதால் ஹைதெராபாத் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் கடைசியில் பட் கமின்ஸ் 24 (19) ரன்கள் எடுத்தும் 18.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஹைதெராபாத் ஐபிஎல் வரலாற்றின் ஃபைனலில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது.

மறுபுறம் பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா சார்பில் ரசல் 3, ஹர்சித் ராணா 2, மிட்சேல் ஸ்டார்க் 2, வைபவ் அரோரோ 1, வருண் சக்கரவர்த்தி 1, சுனில் நரேன் 1 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 114 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் 6 (2) ரன்களில் பட் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 (32) ரன்களில் சபாஷ் அஹமத் சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணியின் அரைகுறை வெற்றி கனவையும் சுக்கு நூறாக உடைத்தார். ஏனெனில் அதிரடியாக விளையாடிய அவர் வேகமாக அரை சதமடித்து 51* (25) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6* (3) ரன்கள் எடுத்ததால் 10.3 ஓவரிலேயே 114/2 ரன்கள் எடுத்த கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2024 ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்று புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: 113க்கு ஆல் அவுட்.. ஃபைனலில் மிரட்டிய கொல்கத்தா.. சிஎஸ்கே’வின் 11 வருட மோசமான சாதனையை தனதாக்கிய ஹைதராபாத்

மேலும் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற அந்த அணி சென்னை, மும்பைக்கு பின் 2வது வெற்றிகரமான அணியாக வரலாற்று சாதனை படைத்தது. மறுபுறம் ஹைதெராபாத் போராடாமலேயே தோற்றதால் தோனிக்குப் பின் உலகக் கோப்பையையும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற கேப்டன் என்ற இமாலய சாதனையை படைக்கும் வாய்ப்பை பட் கமின்ஸ் தவற விட்டார்.

- Advertisement -