விரைவில் வருவேன் ..! ஆபரேஷனுக்கு பின் தமிழக அதிரடி வீரர் நம்பிக்கை..! – யார் தெரியுமா ..?

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வந்த கேதர் ஜாதவ். ஐபிஎல் தொடரில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடிய போது கேதர் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் இறுதியில் காயத்துடன் களமிறங்கி 24 ரன்களை அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.
Kedar-Jadhav

காயம் காரணமாக அந்த போட்டிக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு தொடையில் காயம் பலமாக இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன்னர் தொடையில் அறுவை சிகைச்சையும் செய்துகொண்டு அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவவித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தனது உடல் நலன் குறித்து தெரிவித்துள்ள கேதர் ஜாதவ்’சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு எந்த தகவலையும் நான் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை. அதன்பிறகுதான் என்னை ஊக்கப்படுத்துபவர்கள் மற்றும் எனது பலம் நீங்கள்தான் என்பதை உணர்ந்தேன். என் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். கூடிய விரைவில் முழு உடல்தகுதியுடன் களத்திற்கு வருவேன்” என்று அதில் கூறியுள்ளார்.
Kedar-Jadhav (1)

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன் பின்னர் 40 ஒருநாள் போட்டிகள் 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தென்னாப்ரிக்காவிற்கு எதிரான போட்டி தான், இவர் இந்திய அணியில் விளையாடிய கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement