பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து கூற விராட் கோலிக்கு மட்டுமல்ல. இவர்களுக்கும் உண்டு – கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்று முன்தினத்தோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது.

இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் கெயிக்வாட் மற்றும் சாந்தாரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதி நேர்காணல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் கூறும்போது : விராட் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

kapildev

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கபில் தேவ் கூறும்போது : பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட் கோலி உட்பட அணியில் உள்ள ஒவ்வொருவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளர் குறித்து கருத்து சொல்ல விராட் கோலிக்கு உரிமை உள்ளது. பயிற்சியாளரை நாங்கள் மூவரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரைப்போம் என்று கபில்தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement