ஒருவரை மட்டும் நம்பினால் வேலைக்காகாது.. ஜெயிக்கனும்னா இதை பண்ணுங்க.. இந்திய அணிக்கு – கபில் தேவ் அட்வைஸ்

Kapil-Dev
- Advertisement -

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலான இந்திய அணியானது ஐ.சி.சி-யின் 50 ஓவர் உலககோப்பை தொடரை வென்ற பின்னர் பல உலககோப்பை தொடர்களை இந்திய அணி மிகவும் நெருக்கமாக சென்று தவறவிட்டது. அப்படி ஒவ்வொரு முறை இந்திய அணி நெருக்கமாக வந்து கோப்பையை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் மீண்டும் ஒருமுறை தோல்வியை சந்தித்து அந்த தொடரிலும் கோப்பையை இறுதிநேரத்தில் தவறவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் தோல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இம்முறை டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி காத்திருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள், சூப்பர் 8 சுற்று போட்டிகள் என எந்த ஒரு இடத்திலுமே தோல்வியை சந்திக்காமல் பலமான அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி அடுத்ததாக இறுதிப்போட்டியில் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, பாண்டியா என ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசுகிறோம்.

- Advertisement -

ஆனால் அப்படி பேசுவது தவறான ஒன்று. ஏனெனில் ஒரு போட்டியை வெல்ல வேண்டுமெனில் நட்சத்திர வீரர் ஒருவர் மட்டும் பங்களித்தால் போதாது. அணியில் உள்ள அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும். எனவே இனி தனி ஒருவரை பற்றிய கண்ணோட்டத்தை பற்றி பேசாமல் அணியில் உள்ள அனைவரை பற்றியும் நாம் பேச வேண்டும். ஒரு அணியாக 11 பேருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கினால் தான் வெல்ல முடியும்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் முடிவு என்னவாக இருக்கும் – ரூல்ஸ் கூறுவது என்ன?

அணியின் வெற்றி என்பது தனிப்பட்ட வீரரை சார்ந்தது கிடையாது. ஒரு அணியாக நாம் ஒன்றிணைந்தால் தான் கோப்பையை கைப்பற்ற முடியும். எனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு அணியாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என தனது அட்வைஸை வழங்கியதோடு இந்திய அணிக்கு வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement