இந்திய அணியின் வீரரான இவரது கேப்டன்சியின் கீழ் நான் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த வில்லியம்சன்

Williamson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Dhoni

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய தொடரின் போது கூட தோனியை மிஸ் செய்கிறேன் என பல ரசிகர்கள் பேனர் காட்டியதையும், கோலி தானும் தோனியை மிஸ் செய்கிறேன் என்பது போல கூறியதும் இணையத்தில் வைரலாகியது அதனைத் தொடர்ந்து தோனியின் அளவிற்கு என்னிடம் வேகம் இல்லை என்று தவானிடம் ஸ்டம்பிங் செய்துவிட்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் டோனியின் பெயரை உச்சரித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது தோனி கிரிக்கெட்டில் கால் பதித்து நேற்றோடு 16 வருடங்கள் கடந்த நிலையில் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் ஒரு செய்தி நிறுவனம் அவரது கேப்டன்சி, பேட்டிங் மற்றும் அனைத்து வகையான செயல்பாடு குறித்தும் பேட்டி ஒன்றினை எடுத்தது.

Williamson

அதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் எந்த கேப்டனுக்கு கீழ் தான் விளையாட விரும்பியதாகவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் தோனியின் கீழ் விளையாட ஆசைப்படுகிறேன். மேலும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அதிகம் விருப்பப்படுகிறேன். கிரிக்கெட்டில் தோனி ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். அவரது வழியில் செயல்பட நான் விரும்புகிறேன். அவரை பார்த்து கேப்டன்ஷிப் எவ்வாறு செய்வது என்பதை கண்டு ஆச்சரியப்பட்டு உள்ளேன். அதனால் தோனியின் கீழே நான் விளையாடவும், அவரிடம் இருந்து கேப்டன்ஷிப்பை கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

Williamson

அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் தற்போதைய ஜென்டில்மேன் வீரராக பார்க்கப்படும் வில்லியம்சன் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எல்லை மீறாமல் தனது உணர்வுகளை அடக்கி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற மிகச் சிறந்த கேப்டன் என்று பார்க்கப்படுபவர். அவரே தற்போது தான் தோனியின் கீழ் விளையாட ஆசைப்படுவதாகவும், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறி உள்ளது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement