என்னா மனுஷன்யா.. படுதோல்வியை பரிசளித்த ஆப்கானிஸ்தானுக்காக வில்லியம்சன் சொன்ன வார்த்தை.. தோல்வி பற்றி பேட்டி

Kane Williamson
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் வலுவான நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் மிரட்டியது. ஜூன் 8ஆம் தேதி கயானா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 159/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹமனுல்லா குர்பாஸ் 80, இப்ராஹிம் ஜாட்ரான் 44 ரன்கள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. அந்த வகையில் திணறலாக பேட்டிங் செய்த அந்த அணி 15.2 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு யாருமே 20 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பாராட்டிய வில்லியம்சன்:
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 4, கேப்டன் ரசித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. அத்துடன் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அணி என்ற உலக சாதனையும் ஆப்கானிஸ்தான் படைத்தது.

ஆனால் அப்படி வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த ஆப்கானிஸ்தானுக்கு போட்டி முடிந்ததும் முதல் வார்த்தையாக கேன் வில்லியம்சன் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவிக்காமல் வாழ்த்து தெரிவித்தார். 2019 உலகக் கோப்பை ஃபைனலில் தோற்காமல் சாம்பியன் பட்டத்தை இழந்த போதே இங்கிலாந்தை வாழ்த்திய அவர் இப்போட்டியை பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்”

- Advertisement -

“அவர்கள் எங்களை அனைத்து துறைகளிலும் வீழ்த்தி விட்டனர். அவர்கள் தங்களுடைய விக்கெட்டுகளை வைத்து நல்ல ஸ்கோர் அடித்தனர். இதை நாங்கள் விட்டுவிட்டு வேகமாக அடுத்த சவாலை நோக்கி நகர வேண்டும். எங்களுடைய வீரர்கள் கடினமாக உழைத்து நன்றாக தயாராகியும் கடினமான தோல்வி கிடைத்தது. இதிலிருந்து வேகமாக நகர வேண்டும். டி20 தொடரில் அனைத்தும் வேகமாக உங்களை நோக்கி வரும்”

இதையும் படிங்க: வெறும் 2 விக்கெட்ஸ்.. 2014 சாம்பியன் இலங்கையை மண்ணை கவ்வ வைத்த வங்கதேசம்.. புதிய வரலாற்று வெற்றி

“160 ரன்கள் சேசிங் செய்வதற்கு கடினமாகும். எங்களுக்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தானின் திறமையால் பார்ட்னர்ஷிப் அமைப்பது கடினமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் எங்களுடைய ஃபீல்டிங் கீழே தள்ளியது. இதை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை அறிவோம். அவர்கள் நல்ல ஸ்கோர் அடித்ததும் அவர்களின் பவுலர்கள் திட்டங்களை செயல்படுத்தினர். எனவே இதைப் பற்றி நாங்கள் பேசி அடுத்த போட்டியில் கம்பேக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement