நீங்க அந்த மாதிரி பிளேயர் கிடையாது.. கோலியை ஃபாலோ பண்ணுங்க.. வில்லியம்சனுக்கு மைக்கேல் வாகன் அறிவுரை

Micheal Vaughan 5
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தத நியூஸிலாந்து அணி உகாண்டா மற்றும் பப்புவா அணிகளுக்கு எதிராக வென்றும் முதல் சுற்றுடன் வெளியேறியது. சொல்லப்போனால் 1987க்குப்பின் ஒரு ஐசிசி தொடரில் அடுத்த சுற்றை தொடாமல் நியூசிலாந்து வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். விராட் கோலிக்கு நிகராக நவீன கிரிக்கெட்டில் கிளாஸ் நிறைந்த வீரராக போற்றப்படும் அவர் 2022இல் முழங்கையில் காயத்தை சந்தித்தார். அப்போதிலிருந்து டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடத் தடுமாறும் அவர் இந்த உலகக் கோப்பையிலும் சுமாராகவே விளையாடினார்.

- Advertisement -

கோலியை ஃபாலோ பண்ணுங்க:
அதன் காரணமாக வருங்காலங்களில் தமக்கு டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது என்றும் கேன் வில்லியம்சன் தெரிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் வில்லியம்சன் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கக் கூடிய வீரர் கிடையாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

எனவே விராட் கோலியை போல் க்ளாஸை பயன்படுத்தி அசத்துமாறு அறிவுரை வழங்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கேன் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரராக வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் நீங்கள் விராட் கோலியை பாருங்கள். கடந்த சில வருடங்களாக விராட் கோலி பின்தங்கினார். ஆனால் இந்த வருடம் திடீரென அவர் மதிப்புமிக்க வீரராக மாறி ஸ்பின்னர்களுக்கு எதிராக சில அற்புதமான ஷாட்டுகளை அடித்தார்”

- Advertisement -

“எனவே விராட் கோலியை பார்த்து அவரைப் போல் 15% விளையாட கேன் முயற்சிக்க வேண்டும். ஒருவேளை 140 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் கூட அவரால் நியூசிலாந்து மற்றும் ஐபிஎல் அணியில் இருக்க முடியும். ஏனெனில் அவரால் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்க முடியும். தற்சமயத்தில் அவர் தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை 15 – 20% அதிகரிக்க வேண்டும்”

இதையும் படிங்க: உண்மையா நீங்க கிரேட்.. இந்தியாவுக்காக தொடர்ந்து இதை செய்ங்க.. விராட் கோலியை வாழ்த்திய வெ.இ வீரர்

“அதைச் செய்தால் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியும். இப்போதும் நம்மால் டி20 கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் அசத்துவதை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பொதுவாக டைமிங்கை பெறுவதற்கு அவர் களத்தில் கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் வெறும் 2 – 3 போட்டிகளில் விளையாடுவது மட்டும் அவருடைய பேட்டிங்கில் எதையும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.

Advertisement