- Advertisement -

விராட் கோலியை விட என் தம்பி தான் இந்த விஷயத்துல பெஸ்ட் – சப்பை கட்டு கட்டிய கம்ரான் அக்மல்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒருபுறம் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கூட படுதோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் பாகிஸ்தான் அணியின் இந்த படுதோல்விக்கு பாபர் அசாமின் தவறான அணித்தேர்வு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தனக்கு விருப்பமான வீரர்களையும் சமீப காலமாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களையும் அணியில் சேர்த்து விளையாட வைத்ததாலே பாகிஸ்தான் அணி தோற்றதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் பல வீரர்கள் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர் என்ற குற்றசாட்டையும் முன் வைத்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் டி20 உலகக்கோப்பை தொடரை பொருத்தவரை விராட் கோலியை விட தனது சகோதரர் தான் சிறந்த நம்பர்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியில் பேவரிசம் நடக்கிறது. தன்னுடைய சகோதரர் சிறப்பாக விளையாடியும் அணியில் இல்லாமல் போய்விட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் எனது சகோதரரான உமர் அகமது குறித்து சில கருத்துக்களை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். விராட் கோலி அளவிற்கு அவர் சிறந்து விளங்கவில்லை என்றாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தனிநபர் அதிகபட்சம் என அனைத்துமே உமர் அக்மலிடம் உள்ளது என்று தெரிவித்துளளார்.

இதையும் படிங்க : 181 ரன்ஸ்.. நூலிலையில் வெளியேறிய ஸ்காட்லாந்து.. தன்மானத்துக்காக இங்கிலாந்தை பழிவாங்காமல் காப்பாற்றிய ஆஸி

அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில ரசிகர்கள் விராட் கோலியை விட உமர் அக்மல் சிறந்தவர் என்றால் வாசிம் அக்ரமை விட முகமது சிராஜ் சிறந்தவர் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -