கபில் தேவ் மாதிரி இந்தியாவுக்காக ரோஹித் ரிஸ்க் எடுக்குறாரு.. மத்தவங்களும் ஃபைனலில் இதை செய்ங்க.. ஸ்ரீகாந்த் அறிவுரை

Srikkanth 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அதில் தென்னாப்பிரிக்காவை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சந்திக்கிறது. அப்போட்டியில் தென்னாபிரிக்காவை தோற்கடித்து 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏனெனில் ஐசிசி தொடர்களில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்த நொறுக்க வேண்டும் என்று அணுகு முறையை ரோகித் சர்மா இந்திய அணியில் கொண்டு வந்துள்ளார். மேலும் மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக ரோகித் சர்மா சுயநலமின்றி அதிரடியாக விளையாடி அற்புதமான துவக்கத்தை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கபில் தேவ் போல:
2023 உலகக் கோப்பை ஃபைனலில் அதை செய்த அவர் இம்முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை பற்றி கவலைப்படாமல் 92 (41) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இந்தியாவுக்காக மற்ற வீரர்களை காட்டிலும் கபில் தேவ் போல கேப்டனாக ரோஹித் சர்மா அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதாக ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். எனவே மற்ற வீரர்களும் 10 – 20 ரன்கள் எடுத்தாலும் அதை ரோஹித் போல அதிரடியாக எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெவ்வேறு தலைமுறைகள் மற்றும் கேப்டன்களை ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் 1983 உலகக்கோப்பைக்கும் இந்த உலகக் கோப்பைக்கும் உள்ள ஒற்றுமையை நான் கொண்டு வருகிறேன். இம்முறை யார் இந்தியாவை வழி நடத்துகிறார் ரோகித் சர்மா. அவர் இங்கே நான் ரிஸ்க்கான ஷாட்டுகளை அடித்து எதிரணியை அட்டாக் செய்கிறேன் என்று சொல்கிறார்”

- Advertisement -

“அவர் இங்கே மிகவும் ரிஸ்க் எடுத்து அற்புதமான இன்னிங்ஸ் விளையாடுகிறார். மற்றவர்கள் அவரைச் சுற்றி விளையாடுகின்றனர். எனவே ஒரு அணியாக சூரியகுமார், பண்ட், பாண்டியா போன்ற அனைவருடன் அக்சர் படேல் கூட 10 – 12 ரன்களை அதிரடியாக எடுக்க வேண்டும். இங்கே பவுலர்களை ரோஹித் சிறப்பாக கையாள்கிறார் என்பது மிகவும் முக்கியம். எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிராக 4வது அக்சர் படேலை கொண்டு வந்த அவர் முக்கியமான பட்லர் விக்கெட்டை எடுத்தார்”

இதையும் படிங்க: ஹாட்ரிக் சாதனை பண்ணிருக்கோம்.. எனக்காக யாரும் எவரஸ்ட் எற வேண்டாம்.. இந்திய அணிக்கு டிராவிட் கோரிக்கை

“எனவே களத்தில் அமைதியாக இருக்கும் அவருடைய குணத்தை நான் விரும்புகிறேன். அதே போலவே கபில் தேவும் மற்ற வீரர்களும் அணிக்காக களத்தில் பங்காற்றுவார்கள். ஒருவர் மட்டும் பங்காற்ற முடியாது. அதை தான் ரோகித் சர்மா செய்துள்ளார். அவர் இந்திய அணியை ஒன்றாக இணைத்துள்ளார். அது தான் கேப்டனாக முக்கியம்” என்று கூறினார்.

Advertisement