- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மழை வந்தும் இப்படியா? உண்மையிலே அவங்க அதுக்கு தகுதியானவங்க.. இந்திய அணியை பாராட்டிய – ஜாஸ் பட்லர்

கயானா நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சுதாரித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 47 ரன்களையும் குடித்தனர்.

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடம் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதியில் வீழ்ந்த இந்திய அணி தற்போது மீண்டும் அவர்களை வீழ்த்தி அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்தியா உண்மையிலேயே இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டனர்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் வரை அவர்களுக்கு கூடுதலாக வழங்கி விட்டோம். அதேபோன்று இந்த சவாலான மைதானத்திலும் அவர்கள் உண்மையிலேயே எங்கள் அணியை மிஞ்சும் அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். இந்த மைதானம் மிகவும் கடினமாக இருந்தது. அவ்வப்போது மழையும் பெய்தது இப்படி ஒரு சூழலில் இந்திய அணி விளையாடிய விதம் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் தான் என்று காண்பிக்கிறது.

இதையும் படிங்க : இவங்கள நம்பி ஒரு புரயோஜனமும் இல்ல.. அதிரடி முடிவை கையிலெடுத்து அறிவிப்பை வெளியிட்ட – இலங்கை பயிற்சியாளர்

அனைத்து துறைகளிலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டு விட்டது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம் என்று நம்புகிறேன் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -