அவர் எங்களோட திட்டத்தை உடைச்சு ஆப்கானிஸ்தானை தோற்கடிச்சுட்டாரு.. ஜோனதன் ட்ராட் வருத்தம்

Jonathan Trott 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் இருபதாம் தேதி நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்டிக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் மற்றும் பரூக்கி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அதனால் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்த போட்டியில் 4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்யார்.

இந்நிலையில் பும்ராவுக்கு எதிராக இப்போட்டியில் தங்களுடைய பேட்ஸ்மேன்ட்கள் நன்றாக விளையாடத் தவறியதே ஆப்கானிஸ்தானின் தோல்விக்கு காரணம் என்று பயிற்சியளர் ஜோனதன் ட்ராட் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக பும்ரா எந்த ஒரு அணிக்கும் முக்கிய பவுலராக இருப்பார். இந்தியாவைப் பொறுத்த வரை அவர் மிகவும் முக்கிய பவுலர். எனவே அவரை நாங்கள் நன்றாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்”

- Advertisement -

“ஆனால் அவருடைய நம்பர் (3/7) நாங்கள் அவரை சிறப்பாக எதிர்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி நாங்கள் போட்டி துவங்குவதற்கு முன்பே பேசினோம். இருப்பினும் அவருக்கு எதிரான திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ளோம். எங்களுடைய சில ஷாட் செலக்சன் அல்லது முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: முடியல போதும்யா இதை நிறுத்து.. சூரியகுமாரிடம் நேரடியாக பேசிய ரசித் கான்.. விளக்கிய ரவி சாஸ்திரி

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து சிறப்பாக விளையாடி எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி ஜூன் 22ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement