அநியாயம் பண்ணிட்டீங்க.. ஆப்கானிஸ்தானின் தோல்விக்கு இது தான் காரணம்.. ஐசிசி’யை விளாசிய ஜோனதன் ட்ராட்

Jonathan Trott
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அதனால் 31 வருடங்களில் 17 தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஒரு ஐசிசி உலகக் கோப்பையின் ஃபைனலுக்கு தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. மறுபுறம் போராடாமலேயே தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.

சமீப காலங்களாகவே மிகப்பெரிய எழுச்சி கண்டு வரும் ஆப்கானிஸ்தான் இந்த தொடரில் இந்தியாவுக்கே சவாலை கொடுக்கக் கூடிய நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் முக்கியமான போட்டியில் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாயும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அதே வேகத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

தோல்விக்கு காரணம்:
அதன் காரணமாக செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு கண்டிப்பாக ஆப்கானிஸ்தான் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் தங்களுடைய குறைந்தபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் மோசமான சாதனை படைத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

இந்நிலையில் தங்களுடைய தோல்விக்கு நியாயமற்ற பிட்ச் தான் காரணம் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி’யை போட்டியின் முடிவில் அவர் கடுமையாக விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இப்படி விமர்சித்து என்னை நானே பிரச்சினைக்கு உள்ளாக்க விரும்பவில்லை. ஆனால் உலகக் கோப்பை செமி ஃபைனல் போட்டிக்கு இது போன்ற ஒரு பிட்ச் இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்”

- Advertisement -

“அது கொஞ்சம் நியாயமாக இருந்திருக்க வேண்டும். அதற்காக வேகம் அல்லது சுழலுக்கு சாதகமாக இல்லாமல் பிட்ச் ஃபிளாட்டாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதில் பேட்ஸ்மேன்கள் கவலையின்றி முன்னோக்கி அடித்து ஆட செல்ல வேண்டும் என்று தான் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தங்களுடைய திறன் அல்லது லைனை வைத்து கால்களை பயன்படுத்தி முன்னோக்கி சென்று அடிப்பதற்கான தன்னம்பிக்கையை பெற வேண்டும்”

இதையும் படிங்க: என்னை விட அவர் 1000 மடங்கு சிறந்த பிளேயர்.. இப்போ உள்ள இந்திய பசங்க வேற லெவல்.. கபில் தேவ் பாராட்டு

“டி20 என்பது அட்டாக் செய்து ரன்களை அடித்து விக்கெட்டுகளை எடுப்பதை பொறுத்ததாகும். அங்கே நீங்கள் இப்படி தாக்குப் பிடிக்க நினைக்கக்கூடாது” என்று கூறினார். அதாவது முன்னோக்கி சென்று அடிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் அளவுக்கு ட்ரினிடாட் பிட்ச் ஒரு தலைப்பட்சமாக இருந்ததாக ட்ராட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஐசிசி தரமான பிட்ச்சை வழங்காதது ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணமானதாக அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement