கவுதம் கம்பீருடம் இணையும் ஜாம்பவான்.. இந்திய அணிக்காக இணைய இருக்கும் பிரமாண்டம் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருவதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் ஏற்கனவே பி.சி.சி.ஐ ஈடுபட்டு வருகிறது. மேலும் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு முடிந்துள்ள வேளையில் அடுத்த பயிற்சியாளருக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர்களை அல்லாமல் இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களையே நியமனம் செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய வேளையில் லக்ஷ்மணன், கம்பீர் மற்றும் நெஹ்ரா ஆகிய சில முன்னாள் வீரர்களில் ஒருவர் தான் அடுத்த பயிற்சியாளராக மாறுவார் என்ற பரவலாக பேசப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் ஐபிஎல் தொடரை கைப்பற்றிய கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. மேலும் ஏற்கனவே பி.சி.சி.ஐ தரப்பில் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரது நிபந்தனைகளை பி.சி.சி.ஐ ஏற்றதால் அவரே இம்மாத இறுதியில் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு கம்பீர் கூறும் சில நபர்களையே துணை பயிற்சியாளர்களாக நியமிக்க பிசிசிஐ ஒப்புதல் வழங்கி உள்ளதாக பேசப்பட்ட வேளையில் இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் கம்பீர் தனது தலைமையில் புதிய பயிற்சிக்குழு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரது இஷ்டப்படியே பயிற்சியாளர் குழுவும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் திலீப்-க்கு பதிலாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ்ஸை கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இவருக்கு மட்டும் உங்களால ஃபீல்டிங் வைக்கவே முடியாது.. இந்திய வீரருக்கு நவ்ஜோத் சித்து பாராட்டு

முன்னர் கம்பீர் பணியாற்றிய லக்னோ அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ் என்பதாலும், அவருடன் நெருக்கமான பிணைப்பு இருப்பதாலும் அவரையே பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க கம்பீர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement