- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்த டி20 கேப்டன் பாண்டியாவா? கம்பீர் எப்போது நியமிக்கப்படுவார்? ஜெய் ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது. அத்துடன் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்துள்ளது.

அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக 37 வயதாகும் ரோஹித் சர்மா தன்னுடைய கடைசி முயற்சியில் கேப்டனாக உலகக் கோப்பை வென்று ஓய்வு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
சொல்லப்போனால் சமீப காலங்களில் ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா அதிக டி20 தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் ஓரிரு தொடர்களில் கேப்டனாக செயல்பட்டனர். அடுத்ததாக ஜிம்பாப்வே தொடரில் சுப்மன் கில் டி20 கேப்டனாக செயல்பட உள்ளார். அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஓய்வு பெற்றுள்ளார்.

அதனால் ஏற்கனவே வெளிவந்த செய்திகள் அடிப்படையில் கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு நியமனம் விரைவில் செய்யப்படும். அதற்கு சிஏசி கமிட்டி இன்டர்வியூ செய்து 2 பெயர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். இங்கிருந்து மும்பைக்கு சென்றதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளோம். அடுத்ததாக நடைபெறும் ஜிம்பாப்வே தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்படுவார். ஆனால் புதிய பயிற்சியாளர் அதற்கடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரிலிருந்து பொறுப்பேற்ப்பார்”

இதையும் படிங்க: 2024 டி20 உலககோப்பை தொடருக்கான கனவு அணியை வெளியிட்ட ஐ.சி.சி – பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ

“அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். அது பற்றி தேர்வுக் குழுவுடன் நாங்கள் விவாதிக்க உள்ளோம். ஹர்திக் பாண்டியா பற்றி நீங்கள் கேட்டீர்கள். அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தது. ஆனால் தேர்வுக் குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அதை அவர் நிரூபித்துள்ளார். 3 நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றதிலிருந்தே இந்தியா டி20 கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -