- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவலைப்படாதீங்க விராட், ரோஹித் 2 ஐசிசி தொடரில் விளையாடுவாங்க.. இந்தியாவின் டார்கெட் பற்றி ஜெய் ஷா

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் நிறுத்தியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடம் கொஞ்சம் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த உலகக்கோப்பை உட்பட கடந்த 10 வருடங்களாக அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழி விடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

ஜெய் ஷா அறிவிப்பு:
அதே சமயம் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

அந்த 2 தொடர்களிலும் விராட், ரோஹித், ஜடேஜா ஆகியோர் அடங்கிய சீனியர் இந்திய அணியே விளையாடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அத்துடன் அந்த 2 ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்வதே இந்தியாவின் அடுத்த இலக்கு என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த அணி முன்னேறும் வழியை வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதே எங்களுடைய இலக்கு”

- Advertisement -

“அங்கே கிட்டத்தட்ட இதே போன்ற அணி தான் விளையாடும். அங்கே சீனியர்கள் இருப்பார்கள். 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனல் தவிர்த்து நாம் அனைத்துப் போட்டிகளிலும் நன்றாக விளையாடி வென்றோம். ஆனால் இம்முறை நாம் இன்னும் கடினமாக உழைத்து நன்றாக விளையாடி கோப்பை வென்றுள்ளோம். மற்ற அணிகளை பார்க்கும் போது அனுபவம் முக்கியம். நமது அணியில் ரோஹித் முதல் விராட் வரை அனைவரும் அசத்தினார்கள்”

இதையும் படிங்க: அடுத்த டி20 கேப்டன் பாண்டியாவா? கம்பீர் எப்போது நியமிக்கப்படுவார்? ஜெய் ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

“அனுபவமே வித்யாசத்தை ஏற்படுத்தும். உலகக்கோப்பையில் நீங்கள் சோதனை செய்ய முடியாது. நல்ல வீரர்களுக்கு எப்போது விடைபெற வேண்டும் என்பதும் தெரியும். இத்தொடரில் ரோகித் ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்கள். அது இளம் வீரர்களை விட நன்றாக இருந்தது. இந்தியா அனைத்து ஐசிசி பட்டங்களையும் வெல்வதை நான் விரும்புகிறேன். ஏனெனில் நம்மிடம் அந்தளவுக்கு தரமான வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் நம்மால் தற்போது 3 அணியை கூட களமிறக்க முடியும்” என்று கூறினார்.

- Advertisement -